இந்திய அளவில் நீர் தட்டுப்பாட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 4,378 இந்திய நகரங்களில் 756 நகரங்களுக்கு நீர் தட்டுப்பாடு உள்ளதாக நகர்ப்புற துறை அமைச்சகமும்,ஜல்சக்தி அமைச்சகமும் தெரிவித்துள்ளது.அதில்,அதிக நீர் தட்டுப்பாடு உள்ள நகரங்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது. தமிழகத்தை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் 2வது இடத்தைப்பெற்றுள்ளது. 3வது இடத்தில் அதிக மக்கள் தொகை உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து மழை நீரை சேமிக்க கூடிய வசதியுள்ள புதிய கட்டிடங்களுக்கு மக்கள் குடியேறுவதற்கான வசதியை ஏற்படடுத்துதல்,மழை நீர் சேகரிப்பதை உறுதிப்படுத்துதல் மற்றும் அதனை திறம்பட கண்காணித்தல், நீர் நிலைகளைத் தூய்மைப்படுத்துதல், நீரை சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.