‘கேஜிஎப் 2’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது . இதில் முதல் பாகத்தில் நடித்த யாஷ், ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ரவிபஸ்ரூர் இசையமைத்துள்ளார் .
தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 திரைப்படம் வருகிற ஜூலை 16ஆம் தேதி ரிலீஸாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சுமார் 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் .