தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் விஜயகாந்த். இதையடுத்து அவர் அரசியலுக்கு வந்தார். மக்களுக்கு நல்லது செய்து கொண்டு வந்த விஜயகாந்த் அரசியல் மூலமாக அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்தபோது வேறு மாதிரியாக மாறிவிட்டது. புது படங்களை பார்க்க முடியாவிட்டாலும் அரசியல் கூட்டங்களில் விஜயகாந்த் பார்த்து சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். அதேபோல தமிழக சட்டசபையில் அவர் ஆவேசப்பட்டு நாக்கை துருத்தி பேசியது கூட இன்னும் யாரும் மறக்கவில்லை. அண்மைக்காலமாக விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாததால் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அதன் பிறகு ஒரு வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று அவருடைய மனைவி பிரேமலதா அறிவித்துள்ளார். இதையடுத்து விஜயகாந்த் ரசிகர்கள் முன்னர் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் முடியாமல் திணறிய விடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பாவம் எப்படி இருந்த கேப்டன் இப்படி ஆகி விட்டாரே. பாவம் அவரை விட்டுடுங்க. அவரால் பேசமுடியாவிட்டால் அவர் எழுதி கொடுத்து வேறு யாரையாவது பேச சொல்லுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர். மேலும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெண்களில் கொடூர பிறவி பிரேமலதா. 🙃 pic.twitter.com/m1bb7NqIoy
— மணி (@aranthaimani) February 17, 2021