நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டூர் பகுதிக்கு அருகே இளித்தொரை இந்திரா நகரில் அருள்நாதன் என்பவர் (18) வசித்து வருகிறார் . இவர் 108 அவசர ஊர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நாகராணி ( 25) பிரசவத்திற்காக அங்குள்ள ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.இந்நிலையில் நாகராணி நேற்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது அந்த குழந்தை இறந்து பிறந்ததாக .மருத்துவர்கள் கூறினர். அதனால் அருள்நாதன் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு தனது மனைவி நாகராணிக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்குமாறு கூறியதாகவும் மருத்துவர்கள் காலதாமதம் செய்ததால் குழந்தை இறந்து விட்டது என மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அதன்பிறகு அருள்நாதன் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்தனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு முன்பு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் மருத்துவமனையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் தகவலறிந்த ஊட்டி நகரம் மேற்கு போலீசார் மிக விரைவில் மருத்துவமனைக்கு முன்பு வந்து சேர்ந்தனர். பிறகு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அதில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து விலகிச் சென்றனர். அதன்பிறகு அருள்நாதன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்கச் சென்றார் அதில் அருள்நாதன்தனது மனைவிக்கு இரண்டு நாட்களாக வலி ஏற்பட வில்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு காத்திருந்தோம் பின்பு அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறினேன். ]
அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வரவழைத்தோம். அதன் பிறகு குழந்தையின் இதயத் துடிப்பு மிகவும் குறைந்து வருகிறது. எனவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனால் மருத்துவர் எங்களிடம் குழந்தை இறந்து விட்டதாக கூறினர். குழந்தை இறந்ததற்கு காரணம் அலட்சியம் தான் என்றும் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருள்நாதன் கூறியுள்ளார்.