Categories
மாநில செய்திகள்

பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.25 லட்சம் வரை லஞ்சம்…. முறைகேடு அம்பலம்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பயிர்க் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை வங்கியில் பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் ரூபாய் 25 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியிலும் கடன் தள்ளுபடி செய்ய ரூ.1.25 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |