Categories
உலக செய்திகள்

நீல கலர் , பச்சை கலர்….. உருமாறிய தெரு நாய்கள்…. ரஷ்யாவில் பரபரப்பு சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.

ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும்  நாய்கள் மட்டுமே இந்த மாதிரி வித்தியாசமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி சுமார் ஏழு தெரு நாய்கள் நீல நிறத்தில் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது .ரஷ்ய நாட்டின் தலைநகரமான மாஸ்கோவிலிருந்து சுமார் 380 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நிஷ்னி நொவ்ஹோரோட் பகுதியில் உள்ள டிஸிர்ஜின்ஸ்க்  நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது . அங்கு இயங்கி வரும் கண்ணாடி தொழிற்சாலையில் இருந்து வெளிவரக்கூடிய நீலநிற சாயத்தில் நாய்கள் விழுந்து புரண்டதால் இவ்வாறு நடந்து இருக்கலாம் என்று கால்நடை மருத்துவர்கள் தகவல் வெளியிட்டனர். மேலும்  இந்த நாய்கள் நலமுடன் இருப்பதாகவும் நன்றாகவே சாப்பிடுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுமட்டுமின்றி மாஸ்கோவில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொடால்ஸ்க் என்ற பகுதியில் உள்ள சில நாய்கள் பச்சை நிறத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ பிராந்திய அமைச்சரவை இது தொடர்பாக பேசியுள்ளனர். அந்த பகுதியிலுள்ள பெயிண்ட் மூலமாக  பச்சை வண்ணமே ஏற்பட்டிருக்கலாம்  என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இதுபற்றி உள்ளூர் ஊடகங்கள் இது விஷமிகளின் வேலையாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இப்பகுதியிலுள்ள நாய்களையும் கால்நடை மருத்துவர்கள் சோதித்து பார்த்தனர் இந்த நாய்களும் நலமுடன் தான் இருக்கின்றது என தெரிவித்துள்ளனர். மேலும் சில ரசாயன மாசு தான் இதற்கு காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |