தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுகவினரும் திமுகவினரும் மாறி மாறி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மகளிர் சுய உதவிக்குழுவினரின் அனைத்து கடன்களை ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் பேசுகையில், ” ஏழை எளிய மக்களின் விவசாய கூட்டுறவு வங்கி நகை கடன் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தேன். இதுபோன்று கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன்கள் திமுக ஆட்சி அமைந்ததும் தள்ளுபடி செய்யப்படும். இந்த அறிவிப்பை முதல்வர் கேட்டிருப்பார். இதையடுத்து நாளையே இந்த கடன்களை தள்ளுபடி செய்து விடுவார். இதை சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். கோபம் வந்தாலும் அதுதான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.