தமிழக அரசின் தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை
பணி: வேளாண்மை அதிகாரி (Agricultural Officer (Extension))
காலியிடங்கள்: 365
மாத சம்பளம்: ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை
தகுதி: வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் (B.Sc Agri) தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள்
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/04_2021_AO_EXTN_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.03.2021