கிரண்பேடி அறிவித்த ஆணையில் வடமாநிலத்தை சேர்ந்த மூவருக்கு பதவி என்பதால் மற்ற ஊழியர்களிடம் சர்ச்சை நிலவி வருகிறது
புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் மாளிகையில் கிரண்பேடி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வருகிறார். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் டெபுடேசன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தற்போது வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபருக்கு பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது மற்ற ஊழியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சரின் குற்றச்சாட்டால் ஆளுநர் மாளிகையில் செலவு அதிகமாக இருக்கும் நிலை என்பதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களை அவர்கள் பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமலும் எந்தவித பதவி உயர்வும் இல்லாத நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த மூவருக்கு பிப்ரவரி 15ஆம் தேதி நிரந்தர பதவி வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து கிரண்பேடி அறிவித்த ஆணைக்கு எதிராக அரசு ஊழியர் குழுமங்கள் குற்றசாட்டுகள் வைத்து வருகின்றனர்