ஜகமே தந்திரம் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் . நடிப்பதாக கூறப்படுகிறது விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பச்சத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பாரா அல்லது துருவ்க்கு ஜோடியாக நடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.