தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். தினமும் 6 மணி நேரம் அல்லது 8 மணிநேரம் தூங்குவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். தினசரி போதுமான நேரம் தூங்காமல் இருந்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது பார்க்கலாம்.
மூளை மந்தமாகும் -தலைவலி எரிச்சல் ஏற்படும். கழிவுகள் சேரும், செயல்பாடு மந்தமாகும்.
பதற்றம் அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிக்கும் – ஹார்மோன் சமநிலை பாதிப்பதால் உடல் பருமன் கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
மனம் அமைதி கெடும்.
சமநிலை பாதிக்கும்.
இதய நோய், நீரிழிவு நோய் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
உடல் உறுப்புகள் கை கால் மூளை ஒருங்கிணைப்பு பாதிப்பதால் விபத்துகளில் சிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.