தமிழின் சிறப்பை சொல்லாத நாளில்லை பேசாத வாய் இல்லை பாடாத வரிகள் இல்லை. அப்படிப்பட்ட தமிழின் சிறப்பை இப்போது காணலாம். ஏன் பிறந்தோம் எதற்காக பிறந்தோம் ஏன் இவர்களுக்கு பிறந்தோம் என்றெல்லாம் கூட நினைத்தவர்கள் உண்டு. ஆனால் தமிழனாக பிறந்ததற்கு பெருமைபட்டவர்கள் மட்டுமே பலகோடி இங்குண்டு. மற்ற மாநில தேசத்தவர்களும் தமிழனாக பிறந்திருக்கலாமோ என்று ஏக்கம் கொள்ளும் மொழி தமிழ் மொழி. மிகவும் பழமையான மொழி. தொன்றுதொட்ட மொழி. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி எம் தமிழ் குடி.
உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். மற்ற மொழிகளுக்கு எல்லாம் இல்லாத சிறப்பு எம் தாய் மொழியான தமிழ் மொழியிலேயே இருக்கிறது. அது தாய்மொழி தமிழையே கடவுளாக கொண்டாடுவதுதான் அச்சிறப்பு. தமிழ் தாய்க்கு கோவில் கட்டி கொண்டாடிய மொழி எம் தமிழ்மொழி எம் தமிழினம். அனைவராலும் புகழப்படும் மொழி தமிழ். மற்ற நாட்டவரும் நம் நாட்டிற்கு வந்து தமிழை கற்று பல பாடல்களை இயற்றிய பெருமைகுறிய மொழி தமிழ் மொழி. மற்ற மொழிகளைக் கற்கும் கால அளவை விட தமிழை எளிமையாக கற்று விடுகின்றனர் வேற்று மொழியினர். இதைவிட சொல்ல என்ன பெருமை வேண்டும்.
மற்ற மொழியினர் தாய்மொழியிலேயே பெயர் வைத்துக் கொண்டனர். ஆனால் தாய் மொழியையே பெயராக வைப்பது சிறப்பு மிக்க எம் தமிழில் மட்டுமே தான். அப்படிப்பட்ட தமிழைப் பேசும் தமிழனின் பெருமைகள் எண்ணில் அடங்காது. திருச்சியில் உள்ள கல்லனை அக்காலத்திலேயே உலகத்தில் நான்காவது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீரை தேக்கி வைத்து இன்றளவும் சேதமும் இல்லாமல் நின்று பறைசாற்றுகின்றது தமிழனின் பெருமையை என்று சொன்னால் அது மிகையாகாது. கங்கை கொண்ட சோழபுரம் கோவில் உள் பக்க சுவற்றிலே மரகத கற்கள் பதிக்கப்பட்ட கோவில் கோடைக் காலங்களிலே குளுமையையும் மழைக்காலங்களிலே வெதுவெதுப்பு தன்மையையும் தரக்கூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அன்றே கட்டப்பட்டது.