KGF படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யஷ். கர்நாடகா மாநிலத்தில் வசிப்பவர் ராமகிருஷ்ணா(25). இவர் தீவிர நடிகர் யஷ் மற்றும் சித்தாராமையாவின் தீவிர ரசிகர் ரசிகர் ஆவார். இந்நிலையில் ராமகிருஷ்ணா தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டேன் என்றும், அம்மாவிற்கு நல்ல மகனாக இருக்க முடியல. அண்ணனுக்கு நல்ல தம்பியாக இருக்க முடியவில்லை. காதலில் வெற்றி பெற முடியவில்லை. வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லை.
அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். ஆனால் நான் யஷ் மற்றும் சித்தராமையாவின் ரசிகன் என்பதால் அவர்கள் இருவரும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய கடைசி ஆசை என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து யஷ் ராமகிருஷ்ணன் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது ரசிகர்கள் தான் எங்கள் வாழ்க்கை, எங்கள் பெருமை.
ஆனால் மாண்டியா ராமகிருஷ்ணன் அன்பால் பெருமைப்பட முடியும். இது அவர்களின் உண்மையான அன்புக்கு உதாரணமாக இருக்காது. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார். மேலும் சித்தராமையா ராமகிருஷ்ணாவின் இறுதிசடங்கில் கலந்துகொண்ட விடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ಮಂಡ್ಯ ತಾಲೂಕಿನ ಕೋಡಿದೊಡ್ಡಿ ಗ್ರಾಮದಲ್ಲಿ ಆತ್ನಹತ್ಯೆಗೆ ಶರಣಾದ ಕೃಷ್ಣ ಎಂಬ ಯುವಕನ ಅಂತ್ಯಕ್ರಿಯೆಯಲ್ಲಿ ಭಾಗವಹಿಸಿದೆ.
ಆತ್ಮಹತ್ಯೆಗೂ ಮುನ್ನ ಹುಡುಗ ತನ್ನ ಅಂತ್ಯಕ್ರಿಯೆಗೆ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಬರಬೇಕು ಅಂತ ಬರೆದಿಟ್ಟಿದ್ದ, ಆ ಕಾರಣ ಅತ್ಯಂತ ದುಃಖದಿಂದ ಆತನ ಕೊನೆ ಆಸೆ ಈಡೇರಿಸಿದ್ದೇನೆ. 1/5 pic.twitter.com/5CkznIfy27— Siddaramaiah (@siddaramaiah) February 18, 2021