Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் தினக்கூலி உயர்வு…. ஒரே அறிவிப்பில் அரசு பல்டி…!!

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அதிகரித்து அசாம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அசாம் மாநில வாக்கு வங்கியை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதையடுத்து அசாம் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கணிசமான அளவில் வாக்கு வங்கியாக இருக்கின்றர். அமைப்பு சார்ந்த துறையில் மட்டுமே 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

ராகுல்காந்தி இந்த அறிவிப்பை  வெளியிட்டதை அடுத்து அவசர அவசரமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலியை 318 ரூபாயாக உயர்த்தி அசாம் அரசு அறிவித்துள்ளது. இதுபோக அன்மையில் அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |