Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுடன் சேருவாரா ‘பரதன்’… திடீர் திருப்பம்… பரபரப்பான அரசியல் சூழல்…!!!

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து சசிகலாவுடன் இணைவதாக மறைமுக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தன்னை பரதனாக காட்டிக்கொள்ளும் துணை முதல்வர் ஓபிஎஸ், தற்போதைய ஈபிஎஸ் உடன் இருந்தாலும் சசிகலா மற்றும் அமமுக பக்கம் சாய்கிறாரோ என்று சொல்லும்படி மறைமுக சமிக்கைகளை வெளிப்படுத்துகிறார். ஓபிஎஸ் பற்றி கடந்த சில நாட்களாக டிடிவி பாசிட்டிவாக பேசுவதும் இதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. ஆனால் சசிகலாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. டிடிவி வார்த்தையில் ராவணனிடம் (ஈபிஎஸ்) சேர்ந்த பரதன், அங்கிருந்து விலகி சசிகலாவுடன் சேர்வாரா… பாஜக இதை அனுமதிக்குமா…தற்போதைய அரசியல் சூழலில் ஓபிஎஸ் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Categories

Tech |