அன்னாசி பழத்தை அளவாக சாப்பிடுவதால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும். இதில் பல உடல்நலத்திற்கு தேவையான பயன்கள் இருப்பது போல சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கின்றன. இந்த பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது கிடையாது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும் .
பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸாக செய்து சாப்பிட்டாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். அன்னாசிப்பழம் அதிகமாக சாப்பிடும் போது பற்களில் கறை ஏற்படும். பற்களின் எனாமல் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பழம் சில சமயங்களில் சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதில் அதிக அளவில் அசிடிட்டி உள்ளது.