Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் தவறவிட்ட நகைகள்…. போலீசாரிடம் ஒப்படைத்த டிரைவர்….குவியும் பாராட்டுக்கள்…!!

கோவை பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனது காரில் பயணிகளால் தவறவிட்ட 40 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த பாபி ஒரு டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். விடுமுறை காலங்களில் தனது காரை அவரே ஓட்டிச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஒரு குடும்பம் (ஒரு ஆண், ஒரு மூதாட்டி, பெண், சிறுவன்) கோவை கோர்ட் முன்பு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று காரில் ஏறி உள்ளனர். அவர்களை அவர் அங்கு இறக்கி விட்டு அடுத்த சவாரிக்கு சென்று உள்ளார்.பின்னர் பாபியின் செல்போன் எண்ணிற்கு ஒருவர் தொடர்பு கொண்டு நாங்கள் உங்கள் காரில் காலையில் வந்தோம் டிக்கியில் ஒரு பேக்கை தவற விட்டோம். அது இருக்கிறதா? என்று கேட்டனர்.

இதையடுத்து பாபி காரின் டிக்கியை திறந்து பார்த்தபோது அதில் இருந்த அந்தப் பையின் அங்க அடையாளங்கள் மற்றும் அதில் என்ன இருக்கிறது? என்று விசாரித்தார். அதற்கு அந்த நபர் பதிலளிக்கவில்லை எனவே சந்தேகத்தின் அடிப்படையில் பாபி இதை காவல்துறையினரிடம்  ஒப்படைத்துள்ளார். பின்னர் போலீஸார் பாபி கொடுத்த அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு அடையாளங்களைக் கூறி உங்கள் பையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காலையில் பயணம் செய்த அந்த குடும்பம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். தாங்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வர இருப்பதால் 15 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகைகளை வீட்டில் வைக்க பயந்து தங்களுடன் எடுத்து வந்ததாக கூறினர்.

அவர்களை பார்த்த டாக்சி டிரைவர் இவர்கள் தனது காரில் பயணம் செய்தவர்கள் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனைவரையும் விசாரித்த பின்னர் நகைகளை அந்த குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். டிரைவர் பாபியின் நேர்மையான குணத்தை எண்ணி பாபியை அனைவரும் பாராட்டினர்.

 

 

Categories

Tech |