Categories
தேசிய செய்திகள்

யம்மாடியோவ்…. ரயிலுக்கு அடியில் படுத்து…. நூலிழையில் உயிர் பிழைத்த பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!

பெண் ரயில் தண்டவாளத்தில் படுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஹரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் ரயில் சிக்னலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது ரயில்வே தண்டவாளத்தில் இருந்து அடுத்த பிளாட்பார்மிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை எடுத்து விட்டதால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து அப்ப்டியே தண்டவாளத்தில் நின்றுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் பலர் அப்படியே அந்த பெண்ணை தரையில் படுக்கும்படி கூறியுள்ளனர். அப்போது ரயில் மெதுவாக நகரும் போது அந்த பெண் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து கிடப்பதை வீடியோவில் எடுத்துள்ளனர்.

இதையடுத்து ரயில் கடந்து சென்ற பிறகு அந்த பின் அதிர்ஷடவசமாக உயிர் தப்பி தண்டவாளத்தில் இருந்து எழுந்து வருகிறார். இதையடுத்து அங்கிருந்த பலரும் ஓடிச்சென்று அவரை பாதுகாப்பாக தூக்கியுள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலுக்கு அடியில் படுத்து உயிர்பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |