Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.1000- க்கு மேல் பணம் எடுக்க முடியாது… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கிவாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி சமீப காலமாக பல்வேறு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதுமட்டுமன்றி உத்திர வாதங்களையும் பிறப்பித்து வருகிறது. அவ்வகையில் கர்நாடகாவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற முடியும் என அறிவித்துள்ளது.

அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும். இந்த கட்டுப்பாடு ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும். மேலும் எந்த ஒரு புதிய முதலீடும் அல்லது புதிய பொறுப்பையும் முன் ஒப்புதல் இல்லாமல் எடுக்க கூட்டுறவு வங்கி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கியின் உரிமம் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. எனவே வங்கி வாடிக்கையாளர்களின் பணம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |