Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு திடீர் ரத்து?… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படும் நிலை தொடரும். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வி துறை ஆய்வுக்குப் பிறகு தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |