பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்ரபதி சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது. அந்தப் பதிவில் ட்விட்டர் நிறுவனம், பிரதமர் வெளியிட்ட செய்தியில் சென்சிடிவான உள்ளடக்கம் இருக்கலாம், அதைப்பார்க்க உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றி கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.
அதனால் பலரும் திட்டத்துக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரான கருத்துக்களை யாராவது பதிவிட்டால் டுவிட்டர் நிறுவனம் கடந்த சில நாட்களாக அதனை நீக்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது பிரதமர் மோடி இடம் பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.