Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… அடித்து கொடூரமாக கொன்ற கணவன்… கோவையில் பரபரப்பு…!!

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அறிவொளி நகரில் முருகேஷ் என்ற சவுரிமுடி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற இரண்டாவது மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பார்வதியின் நடத்தையில் சந்தேகம் வந்தால் முருகேஷ் அவரை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் முருகனுக்கும் பார்வதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது கோபமடைந்த முருகேஷ் வீட்டிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து பார்வதியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய முருகேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |