சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு காரணமாக போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலே முடக்கப்பட்டன. இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். தனிமையில் இருந்த சிலரின் பழக்க வழக்கங்களும் மாறியுள்ளது. இதன் அடிப்படையில் சிலர் மது மற்றும் போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளனர்.
மாணவர்கள் இணைய வழி கல்வி பயில்வதால் அவர்களின் அன்றாட நிகழ்வுகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இளம் பெண்களும் தங்கள் நண்பர்களை நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலையும் உள்ளனர். இந்த காரணங்களால் அதிகமான மக்கள் தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர்.
இந்த தூக்கமின்மையின் காரணமாக மாணவர்கள் கஞ்சா மற்றும் தூக்கம் மருந்துகளுக்கு அடிமையாகியுள்ளனர். மேலும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் ஊரடங்கு காலத்தில் அதிகரித்துள்ளது.