மணப்பாறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைத்திருநகரைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே சாந்தி தனது வீட்டை பூட்டிவிட்டு மணப்பாறையில் உள்ள தன் தங்கையின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தபோது தனது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதை அடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது தனது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூபாய் 6000 திருட்டு போயிருப்பதை கண்டார். இதுகுறித்து காவல் துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.