Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்கமுடியாது … ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடு…?

புதிய கடன்களை வழங்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கிக்கு  தடை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி சமீப காலங்களில் பல்வேறு வங்கிகளுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், கர்நாடாகவை சேர்ந்த டெக்கான் அர்பன் என்ற கூட்டுறவு வங்கிக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ வங்கி விதித்துள்ளது. இந்த வங்கி புதிய கடன்களை வழங்க தடை விதிக்கப்படுவதாக ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. மேலும், வங்கியின் தற்போதைய பண நிலையைப் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து 1000-க்கு மேல் திரும்பப் பெற முடியாது.

இது அனைத்து கணக்கு வைத்து இருபவர்களும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு புதிய முதலீடும் அல்லது புதிய பொறுப்பையும் முன் ஒப்புதல் இல்லாமல் எடுக்க கூட்டுறவு வங்கிக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம் விசாரணை நோக்கத்திற்காக டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கி தடை செய்யப்பாட்டாலும், வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை. எனவே வாடிக்கையாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |