Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

” 100 நாள் வேலையில் ஏற்பட்ட கள்ளக்காதல்”… கள்ளக்காதலியை கொலை செய்து தற்கொலை செய்த இளைஞன்..!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே கள்ளகாதலியை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நாயகன் பட்டியை சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மனைவி ரதிதேவி. இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொறுப்பாளராக இருந்துள்ளார். குரும்பபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒன்றிய பணிகளை போட்டோ எடுத்து வந்தவர். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இப்பிரச்சினையில் சுரேஷின் மனைவிக்கு தெரிய வந்ததால் அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று ரதிதேவி-சுரேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. சுரேஷ் கல்லால் ரதிதேவி யைத் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார், காயமடைந்த ரதிதேவி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார், தப்பி ஓடிய சுரேஷ் குரும்பட்டி கண்மாயில் விஷம் குடித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார்.

Categories

Tech |