தமிழகத்தில் கடனுதவி வழங்க தனி கார்ப்பரேஷன் ஒன்றை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அது மட்டுமன்றி தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் புதிய அரசாணைகளை வெளியிடுகிறது.
இந்நிலையில் மொழிவாரி சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில் முறையில் முன்னேற்றம் பெற, அவர்களுக்கு உதவுவதற்காக தனிக் ஆபரேஷன் ஒன்றை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மொழிவாரி சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும். தொழில்முனைவோர்கள் ஆக உருவாக அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.