கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணவன் காரை ஏற்றி மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த 40 வயதான கோகுல் குமார் என்பவர் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனிதவளத் துறையில் வேலைப் பார்த்து வந்த 33 வயதுடைய கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கோகுல் குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் கோகுல் குமாருக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. அதன் பிறகு இருவருக்கும் சண்டை முக்தி அடைந்ததால் கீர்த்தனா கோகுல் குமாருடன் வாழப்பிடிக்காமல் பிரிந்து செல்ல முடிவு செய்தார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு மனு அனுப்பி உள்ளார். மேலும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் கோபமுற்ற கோகுல் குமார் மீண்டும் தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மிகவும் ஆத்திரம் அடைந்த கோகுல் குமார் சமையலறையின் கத்தியை எடுத்து கீர்த்தனாவை குத்தியுள்ளார்.
இதில் கீர்த்தனாவின் கழுத்துப் பகுதி துண்டாகியுள்ளது. அதன்பின்னும் கோகுல் குமாரின் ஆத்திரம் அடங்காமல் கீர்த்தனாவின் முடியை பிடித்து வெளியே இழுத்து வந்து தனது காரை கீர்த்தனாவின் மேல் பலமுறை ஏற்றிக்கொண்று ள்ளார். அதன் பிறகு கோகுல் குமார் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
கீர்த்தனாவின் சடலத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன்பிறகு கோகுல் குமார் கார் ஆத்தூர் சுங்க சாவடி அருகே விபத்தில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் கோகுல் குமாரை கைது செய்தனர்.