சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளதால் பல்வேறு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வெண்ணிற ஆடை, நீண்ட கொண்டை, தாடி என பல வகையில் அமைர்ந்து ஒரு கையில் ஓலைச்சுவடி, மறு கையில் எழுத்தாணி , தலைக்கு பின்னால் அறிவொளி என அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் உருவப்படம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதே இந்நிலையில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் திருவள்ளுவருக்கு காவி உடையில் அமர்ந்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய படம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மு க ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில்: “சிபிஎஸ்இ 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்!.பாஜக அரசு அனுமதிக்கிறது; அடிமை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள திமுக பொறுக்காது.எச்சரிக்கை!” என பதிவிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், ”
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான எட்டாம் வகுப்பு இந்தி பாடநூலில் திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப் படுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப் படுத்தக்கூடாது” என்று தெரிவித்தார்.