Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தமிழக மக்களே உஷார்”…. வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…. மக்களுக்கு அறிவுரை…!!

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்ததன் காரணமாக தென்காசி, மதுரை, தேனி, கோவை ஆகிய நான்கு  மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் சேர்த்து டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபடுமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு கொசு சுத்தமான தண்ணீரில் இருந்து உற்பத்தியாவதால் அதை தடுக்க தண்ணீர் தொட்டியை எப்போதும் மூடி வைக்கவும், குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் உள்ள தண்ணீரில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க அவ்வப்போது அதை சுத்தம் செய்யவும், அது மட்டுமின்றி வீட்டில் ஓரமாக கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |