உலகமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.எனவே ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பில் ஏழை நாடுகளுக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை தொடர்பாக விவாதிக்க வில்லை என்று தெரியவந்துள்ளது.
சீனாவைத் தொடர்ந்து பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்து கொரானா வைரஸ் தற்போது ஜெர்மன், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தீவிர கட்டுப்பாடுகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.