விமானம் தரையிறங்கியபோது மின்கம்பத்தில் இறக்கை மோதியுள்ள சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு புறப்பட்டு வந்துள்ளது. அப்போது இந்த விமானம் மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து தரையிறங்க சிக்னல் கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கி உள்ளது. அப்போது ஓடு பாதையின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் விமானத்தின் இறக்கை மோதி பாதிப்படைந்துள்ளது.
இதனால் மின்கம்பம் சாய்ந்து உள்ளது. எனினும் சுதாரித்துக்கொண்ட பைலட் விமானத்தை அதே இடத்தில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து ஊழியர்கள், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.