ரஷ்யா கோழிப் பண்ணையில் பணி புரியும் சில ஆட்களுக்குப் H5N8 என்ற வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சல் பரவாது என்று செய்தி வந்தால் சற்று நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அங்கு உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணிபுரியும் சிலருக்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளது கண்டறிந்துள்ளனர் கோழிப் பண்ணையில் பணி புரியும் இந்த ஏழு ஊழியர்களுக்கு H5N8 என்ற வகை பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நிகழ்வு உள்ளது. இதுவே முதல்முறை என்று ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு அலர்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலே முழுமையாகக் கட்டுக்குள் வராத சூழலில் பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.