Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… வேகமாக பரவும் டெங்கு… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரம் எடுப்பதாக பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தென்காசி மதுரை தேனி கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.உழைக்கும் மக்களின் முழு உரிமையைப் பாதுகாத்து அங்கு உள்ள சுகாதார துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை மட்டுமின்றி அதோடு சேர்த்து டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. டெங்கு கொசு சுத்தமான தண்ணீரில் இருந்து உற்பத்தியாகிறது.

எனவே குடிதண்ணீரை மூடி வைக்குமாறு ஒவ்வொரு வீட்டுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.தண்ணீரை தேக்கி வைக்கும் குடிநீர் தொட்டிகள் மற்றும் குடம் ஆகியவற்றையும் மூடி வைக்குமாறு விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசுவை ஒழிக்க தென்காசி மாவட்டத்தில் தனி குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் துறையினர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது அதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறோம்.ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் உள்ள தண்ணீரில் கொசு உற்பத்தியாகின்றன. எனவே, கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க அவ்வப்போது அதை சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.வீட்டில் ஓரமாக கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வரு கின்றன.

Categories

Tech |