Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் நள்ளிரவு முதல்…. வெளுத்து வாங்கும் கனமழை…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில்  நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது

இந்த கனமழையின் காரணமாக புதுச்சேரியில் பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையால் அங்குள்ள கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, காராமணி போன்ற பயிறு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |