சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தாலும் பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. நேற்று மாலை நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருதை வழங்கியுள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இதற்கு காரணமான தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் நன்றாக நடிக்க வேண்டும் என்று தமிழக அரசு என்னை ஊக்குவிப்பது போன்று இருக்கிறது. மேலும் இந்த நேரத்தில் என்னுடைய அம்மா அப்பாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறே தெரிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்கள் எப்பொழுது மக்கள் பிரதிநிதியாக போகிறீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு அவரோ பெரிய ஹீரோவாக ஆவேன் என்பது என் கனவு என்று சொன்னாலே அது பெரியது. சினிமாவில் இருக்க ஆசைப்பட எனக்கு ஹீரோ அந்தஸ்து கொடுத்து கலைமாமணி விருது கொடுக்கிறார்கள்.
இன்னும் இந்த விருதுக்கு என்ன தகுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அதைத் தாண்டி நான் எதையும் யோசிக்கவில்லை. அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு என்னை பார்த்து அந்த கேள்வி கேட்பதே ஆச்சரியமாக இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.