Categories
அரசியல்

டிடிவி கவலைல இருக்காரு…! சசிகலா பாத்தாங்க…. சைலண்ட் ஆகிட்டாங்க… அமைதிக்கு இதான் காரணமாம் …!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அணைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து பேசிய அமைச்சர்,சசிகலா அமைதியாக இருப்பது குறித்த கேள்விக்கு, இன்றைக்கு நாட்டில் என்ன நிலைமை என சசிகலாவுக்கு தெரியும். மீண்டும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவோட ஆட்சியும்….. அவுங்க இல்லாம அமைப்பதற்கு முதலமைச்சரை வேட்பாளராக அறிவிச்சாச்சு. அவரோட தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒட்டுமொத்த எண்ணம் தமிழ்நாட்டுல ஏற்பட்டிருச்சு.

இந்த எழுச்சியை பார்க்குறாங்க. எழுச்சியை பார்த்த பிறகு, சத்தம் போடுவாங்களா… ஸைலன்டா இருப்பார்களா ?  ஸைலன்டா இருப்பாங்க.ஓபிஎஸ் மன கஷ்டத்துல இருக்கிறாரு என டிடிவி தினகரன் சொன்ன கருத்துக்கு, டிடிவி தான் இப்ப ரொம்ப  மண கஷ்டத்துல கவலையா இருக்காரு. பார்லிமென்ட்ல ஆயிரம் கோடி செலவு பண்ணிட்டாரு.

இப்போ அதை எடுக்க முடியல,  அது ஒரு கவலை. பணத்தை அள்ளி தெரிவிச்சாரு, அதனால ஒரு வேலையும் ஆகல. பணத்தை தெளிச்சும் வேலை ஆகல…. என்ன பண்ணாலும் வேலை ஆகல. இப்ப என்ன பண்ணணு அவரு தான் கவலையா இருக்காரு.எங்க கட்சியில யாரும் கவலை தோய்ந்த முகத்தோடு  கிடையாது.நல்லா பாருங்க எல்லாமே ஸ்மைலிங் பேஸ் தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Categories

Tech |