கொரோனா விதிமுறைகளை பின்பற்ற விட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்ததுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தினமும் தொடர்ந்து 300 முதல் 400 பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மின்சார ரயில் போக்குவரத்து தற்போது அனுமதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மும்பையில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 700 யை தாண்டியது. இதை தொடர்ந்து மும்பை மேயர் கிஷோரி மின்சார ரயில்களில் பயணம் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மும்பை மாநகராட்சி தடுப்பு விதிகளை மீண்டும் கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளது. விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடம் அதிரடியாக அபராதம் வசூலித்து வருகிறது . முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்குச் செல்லும்கிளின்அப் மார்ஷல்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஆயிரத்து 400 கிளின் அப்மார்ஷல்கள் பணியில் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ரயில்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களை பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார ரெயில்களில் மட்டும் முககவசம் அணியாத பயணிகளைப் பிடிக்க 300 கிளின்அப் மார்ஷல்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் இன்று 897 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை பின்பற்ற விட்டால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.