Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு : உண்மையான விலை தெரிஞ்சிக்கணுமா….? அப்ப இதை படிங்க…..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்படி உயர்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது தான் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்கள். அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு பெட்ரோல் டீசல் தயாரிக்கப்படுகின்றது. ஒரு பீப்பாயில் 159 லிட்டர் கச்சா எண்ணெய் அதில் அடங்கியிருக்கும். அமெரிக்க டாலரின்படி இதன் விலை நிர்ணயம் செய்யப்படும். தமிழகத்தில் விற்பனை சந்தைக்கு வரும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 32.28.

கலால் வரி ரூபாய் 32.90 வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி ரூபாய் 22.84. வியாபாரிகளுக்கான கமிஷன் ரூபாய் 3.39. சரக்கு கட்டணம் 29 காசுகள். இதனால் மொத்த வரியாக ரூ.55.77 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் டீசலுக்கான அடிப்படை விலை 33.80 கலால் வரி ரூ.31.80. வாட் வரி ரூ.16.87. வியாபாரிகளுக்கான கமிஷன் ரூபாய் 2.21. சரக்கு கட்டணம் 29 காசுகள். அடிப்படை விலை தவிர்த்து மொத்தம் ரூ.48.67 வரியாக வசூலிக்கப்படுகிறது.

Categories

Tech |