சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், கேரளா ,கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் 5 மாநில தேர்தல் குறித்து குறித்து முடிவு செய்ய டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 23-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் அட்டவணை இறுதி செய்ய தலைமை தேர்தல் ஆணையம், துணை ஆணையர்கள் குழு கூடுகிறது. பிப்ரவரி 25ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.