புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புதுச்சேரியின் நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர் முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையால் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து களி போன்ற பயிறு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.