தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் . பல ஆண்டுகள் எப்எம் ரேடியோவில் பணிபுரிந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளரான பின் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார் . மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண் சுசினா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாகாபா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . அதில் வீடியோ கேம் ரிமோட்டை வைத்துக் கொண்டிருக்கும் மாகாபாவின் தோல் மீது கால் வைத்து அவரது மகன் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாகாபாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியமடைந்து வருகின்றனர் .