Categories
தேசிய செய்திகள்

கேரள, மகாராஷ்டிரா மக்களே கேளுங்க… எதுல வந்தாலும் அனுமதி இல்ல… மாநில அரசு புதிய உத்தரவு…!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகம் கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலங்களாக  மகாராஷ்டிரா, கேரளா மாநிலம் உள்ளது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசுகளும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கிய போது தமிழகத்திலும் இந்த கட்டுப்பாடு முதலில் இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால்  சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கர்நாடக மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படியே மாநிலத்தில் இருந்து கர்நாடக வரும் மக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இம்மாநிலங்களை சேர்ந்தவர்கள் சாலை, ரயில் மற்றும் விமானம் என எந்த வழியாக வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |