சீனாவை பூர்விகமாக கொண்ட கருப்பு நிற கேரட்டை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார்.
கொடைக்கானலில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருப்பு நிற கேரட்டை பயிரிட்டு விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார். பாம்பார் புரத்தைச் சேர்ந்த ஆசிரி விவசாயி ஆன்லைன் மூலம் கருப்பு கேரட் பற்றி அறிந்து கொண்டு அதன் விதைகளை வாங்கி அவரது தோட்டத்தில் சுமார் 5 சென்ட் பரப்பளவில் பயிரிட்டுள்ளார்.
சீனாவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் கருப்பு கேரட்டின் ருசி நன்றாக உள்ளதாக கூறுகிறார்கள். இதனை எடுத்த மேலும் சில விவசாயிகள் இந்த கருப்பு கேரட்டை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். விவசாயினுடைய இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.