Categories
உலக செய்திகள்

முகக்கவசத்தை மறந்த ஜெர்மன் அதிபர்… அதன் பின்பு அவர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!

நாடாளுமன்ற அவையில் முகக்கவசத்தை மறந்த ஜெர்மன் அதிபர் பதறி சென்று அணியும் வீடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல் முதலாக கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அன்று பரவ தொடங்கிய கொரோனா படிப்படியாக உலகம் முழுவதும் பரவி மக்களை நிலைகுலைய செய்து வருகிறது. எனவே கொரோனாவை  கட்டுப்படுத்தும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாக உலக நாடுகள் முழுவதிலும் மக்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி உலக நாட்டின் தலைவர்களும் பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிந்தபடியே பங்கேற்று வருகின்றனர். மேலும் கடந்த ஒரு வருடமாக முகக்கவசம் மக்கள் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற அவையில் ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் தன் உரையை முடித்துவிட்டு முகக்கவசத்தை மறந்து அமர்ந்துள்ளார். திடீரென்று அவருக்கு முக கவசம் நினைவிற்கு வந்ததும் பதறிப்போன அவர் உடனடியாக எழுந்து சென்று கவசத்தை அணிந்துகொண்டு அமர்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Categories

Tech |