Categories
உலக செய்திகள்

பரபரப்பு செய்தி…! நெதர்லாந்தில் கொட்டிய “பிளேட்” மழை… பீதியில் மூழ்கிய பொதுமக்கள்…!

நெதர்லாந்தில் திடீரென பிளேட் மழை கொட்டியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள மீர்சென் நகரம் முழுவதும் ப்ளேட் மழை கொட்டியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் கூறியதாவது, மாஸ்ட்ரிக்ட் ஆச்சென் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் புறப்பட்ட லாங்டெயில் ஏவியேஷனுக்கு சொந்தமான சரக்கு விமானம் திடீரென வானில் தீப்பற்றி எரிந்தது.

அதனால் விமானத்தின் இன்ஜினில் உள்ள பிளேட்கள் நகரத்தின் சில பகுதிகளில் விழுந்தது. இதில் வயதான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அதன்பின் விமானம் திசை திருப்பப்பட்டு பெல்ஜியத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் பாகங்கள் கார்கள் மீதும் விழுந்துள்ளது. ஆகையால் சேதத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக அதை யாரும் தொட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

லியேஜூக்கு புதிய இன்ஜின் அனுப்பப்பட்டுள்ளதால் விரைவில் விமானம் நியூயார்க் பயணத்தை தொடரும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து விமானம் புறப்படும் போது இயற்கை சீற்றத்தில் மோதியதால் அல்லது பறவையின் மீது மோதியதால் ஏற்பட்டு இருக்கலாம் என்று என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து நெதர்லாந்து விமான போக்குவரத்து துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |