தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இருவரும் 23ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமான நிலையில் நடைபெற்று வருகிறது. தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா துணை ஆணையர் சுசில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் வரும் 23 ஆம் தேதி கூடுகிறது.
இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், எந்த மாநிலங்களுக்கு என்னென்ன தேதிகளில் தேர்தல் நடத்துவது என்ற விவரங்கள் ஆலோசிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அதன் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.