பிரிட்டனில் 3 வாரங்களில் 5 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் மூன்று வாரங்களில் 5 பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்படி ஒரு பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 50 வயதான பெண் ஒருவரிடம் சிறுவன் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதேபோல 29 வயதுடைய ஒரு இளம் பெண்ணை பின்தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு மோசமாக நடந்து கொண்டுள்ளார்.
இப்படி மூன்றே வாரத்தில் 5 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சிறுவனை குறித்த தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. அதனடிப்படையில் பெண்களிடம் மோசமான முறையில் நடந்து கொண்ட 14 வயது சிறுவனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த சிறுவனால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் போலீசாரிடம் வந்து புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.