புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்பாக தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகிய நிலையில் தற்போது அதன் கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலக போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியது. இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமினராயணன் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அதன் கூட்டணிக் கட்சியான திமுகவின் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.