Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

MLA பதவி வேண்டாம்…! பாஜக செல்லும் திமுக பிரபலம்… அதிர்ச்சியில் ஸ்டாலின் …!!

புதுவையில் நாளை ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்து இருந்தார். இந்த நிலையில் தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்யவதற்காக சபாநாயகர் வீட்டிற்கு  வந்திருக்கிறார். 3 திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தற்போது வந்துள்ளார். ஏற்கனவே ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நமச்சிவாயதுடன்  சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டுக்கு வந்திருக்கிறார்.

ராஜினாமா கடிதத்தை கொடுக்கப் போவதாகச் சொல்கிறார். அவர் வெளியே வந்த பிறகுதான் தெரியும், எதற்காக ராஜினாமா செய்தார் என்று. இதனை தொடர்ந்து ஆளும் கட்சியின் பலம் என்பது 12 ஆக இருக்கிறது.சபாநாயகரை நீக்கிவிட்டால் 11ஆக பலம் குறைந்துவிடும் எதிர்க்கட்சி வரிசையில் 14பேர்  இருக்கின்றார்கள. பாஜகவில் இணைந்த நமச்சிவாயதோடு திமுக சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர் வீட்டிற்கு சென்றுள்ளதால் அவர் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |